அம்பாறை மாவட்ட நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணையுடன் இலவச குடிநீர் மற்றும் மின்சார இணைப்புக்களை வழங்கும் இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் திங்கட்கிழமை பெஸ்ட் ஒப் யங் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மகா ஓயா, தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வசதி குறைந்த குடும்பங்களுக்கு புதிதாக குடிநீர் மற்றும் மின்சார இணைப்பை பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளை செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, அம்பாறை மாவட்ட செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு சமூக நல உத்தியோகத்தர் யூ.எல்.அஸார்டீன், கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உதவி முகாமைத்துவ பணிப்பாளர் எம் இஸட் எஸ் றியாஸ், நலன்புரி முகாமையாளர் எஸ் எம் அஜ்வத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தவிசாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் றிசான் ஜெமீல் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக "வாழ்க்கைக்கு ஒளியூட்டல்" எனும் மனிதாபிமான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரோக்கியமான குடும்ப சூழலை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
0 comments :
Post a Comment