வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முப்பது லட்சம் ரூபா மதிக்கத்தக்க அபின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ஈ.ஏ.டபள்யூ.எஸ்.எதிரிசிங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜே.பகீர்தரன், விக்ரம சேகர, எஸ். பண்டார ஆகியோகர் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அபின் போதைப் பொருளும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டள்ளனர்.
வாழைச்சேனை அல் அக்ஷா வீதியில் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டினை சுற்றி வளைத்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் அபின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஓட்டமாவடி புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த் 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். என்றும் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன்; தொடர்புடைய வியாபாரிகள் வேறு யாராவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப் பொருள் பாவனையை இல்லாமல் செய்வதற்கு பொலிஸாருடன் இணைந்து வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டவருவது குறிப்பிடத்தக்கது என்று நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment