வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை (23) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகள், க.பொ.த சாதாரண தரத்தில் 9 ஏ மற்றும் சிறப்புப் பெறுபேறுகள் பெற்ற மாணவிகள் மற்றும் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவிகளின் கலை, கலாசார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆயிஷாவின் சாதனை எனும் சிறப்பு மலரொன்றும் வெளியிடப்பட்டதுடன், கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.சீ.எம்.முனவ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment