வடக்கு கிழக்கை இணைக்க வேண்டாம் என போராட்டம் முன்னெடுப்பு




பாறுக் ஷிஹான்-
டக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து ஐக்கிய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பினை வெளியீட்டுள்ளது.
இதற்கமைய இன்று(28) ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் க‌ல்குடாத்தொகுதி அமைப்பாள‌ர் ச‌ல்மான் வ‌ஹாப் த‌லைமையில் மட்டக்களப்பு ஓட்ட‌மாவ‌டியில் ந‌டை பெற்ற‌ க‌வ‌ன‌ ஈர்ப்பு ஆர்ப்பாட்ட‌த்தில் பல்வேறு சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

இதன்போது வடக்கு கிழக்கை இணைப்ப‌த‌ற்கு துணை போகும் முஸ்லிம் காங்கிர‌சின் துரோக‌த்த‌ன‌த்தை கண்டிக்கின்றோம் கிழக்கு தலைமைகளின் அனுமதியற்ற தீர்வுகளை ஏற்க மாட்டோம் வடக்கு கிழக்கினை இணைக்காதே போன்ற வாசகங்களுடன் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

மேலும் வடகிழக்கு இணைவிற்கு எதிராக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியினால் தேசிய‌ ம‌ட்ட‌த்தில் ஊடக மாநாடுகளும் க‌ண்ட‌ன‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துப்ப‌ட்டு வ‌ருவதாக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :