அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு நிகழ்வு





ஹப்ஷா ஒமர்-
டந்த 2021 - 12 - 26 பம்பலப்பிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு நிகழ்வு பிரமாண்டமாக வெற்றிகரமாக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் (BMICH) நடைப்பெற்றது. இந்த நிகழ்வின் போது பிரதம அதீதியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர , கௌரவ விருந்தினராக

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயன்த், சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ரீ,தனராஜ் கல்விப் பேராசிரியர், Ex. திட்ட அதிகாரி தேசிய கல்வி நிறுவனம்,ஆலோசகர் - DEM திட்ட உயர் கல்வி அமைச்சகம் , பேராசிரியர் சமன் செனிவீர மெல்போர்ன் பல்கலைக்கழகம்- ஆஸ்திரேலியா முன்னாள் இயக்குனர்- தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனம், பேராசிரியர் எஸ்.சந்திர சேகரம் முன்னாள் பீடாதிபதி - கொழும்பு பல்கலைக்கழகம் , கலாநிதி றிஸ்க்கான் பசீர்

இணைப் பேராசிரியர் - த்ரெஸ் கோர்ஜஸ் பல்கலைக்கழகம், சீனா, Mr. Chris Whetter ஆங்கில விரிவுரையாளர் -வார்விக் பல்கலைக்கழகம் - ஐக்கிய இராச்சியம்ஆலோசகர்-அமேசான் கல்லூரி, Mr. Andrew King கல்வி மற்றும் வணிக ஆலோசகர்-நியூசிலாந்து, Dr. T. Vimalan LLB (Hons) கவுன்சில் உறுப்பினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,பணிப்பாளர்-நில சீர்திருத்த ஆணைக்குழு - வட மாகாணம், Mr. R. Uthayakumar

SLEA, M.Ed, B.Bd, ஊடகவிலளார் டிப்ளோமா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும், அமேசன் கல்லூரியின் டிப்ளோமாதாரிகள், பட்டதாரிகள், பிஎச்டிதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள் போன்றோருக்கு பட்டமளித்துடன் மற்றும் ஆசிரியர்கள், பங்குதார நிறுவனங்களுக்கும், அமேசன் கல்லூரியின் ஊழியர்கள் போன்றோருக்கும் இப்பட்டமளிப்பின் விசேட நினைவுச் சின்னம் அமேசன் உயர் கல்வி நிறுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு இல்ஹாம் மரைக்கார் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இப் பட்டமளிப்பு விழாவில் சுமார் 220 மாணவர்கள் தங்களுடைய பட்டத்தினை பெற்றுக் கொண்டனர்.இதில் ஆசிரியர் பயிற்சி நெறி, உளவியலும் உளவளத்துணையும், தகவல் தொழில்நுட்பம், கணக்கியல், இதுபோன்ற பல துறைகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

அமேசன் உயர் கல்வி நிறுவனமானது கல்வியோடு மட்டுமன்றி பல சமூக சேவைகளையும், பல இலவச புலமைப்பரிசில் திட்டங்களையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வின் பிரதம அதீதியாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
Hon (Dr.) Sarath Weerasekara அவர்களுடைய உரையில் இவ் வைபவத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் தலைமைத்துவம் கட்டாயம் என்பதுடன், நாட்டு பற்று வேண்டும் என்பதையும் கூறினார்

கல்வி மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது. கல்வி என்பது கண் போன்றது. அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டுமெனில், கல்வி கற்று கொண்டே இருக்க வேண்டும். கல்வி கற்பது இன்பத்தையே தரும். ஆதலால்தான் கல்வி கற்பவர்கள் மேலும் மேலும் கல்வி கற்கவே விரும்புவார்கள்…
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :