கிழக்கு மாகாணத்தில் முதல் முறையாக தென்கிழக்குப் பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழில்நுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'அனர்த்த ஆபத்து முகாமைத்துவம்' தொடர்பான பிராந்திய மாநாடு நாளை (16 ஆம் திகதி) தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்; நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், ஆய்வுக் கட்டுரைகள், சிறந்த நடைமுறை சார்ந்த அனுபவ கட்டுரைகள், கொள்கை சார்புக் கட்டுரைகள், திட்ட வரைபுளை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள், ஆய்வு முன்தொழிவுக் கட்டுரைகள் போன்ற தலைப்பிலான விடயங்களை உள்ளடக்கியதாக பல்கலைக்கழகம் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இந்த மாநாட்டில் அம்பாரை மாவட்ட அனர்த்த முகமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம்.றியாஸ், பேராசிரியர்கள், பீடங்களின் பீடாதிபதிகள்;, விரிவுரையாளர்கள் மற்றும் அம்பாரை மாவட்ட திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கலந்து கொள்ளவுள்ளனர் என மாநாட்டுக்கான இணைப்பாளரும், முன்னாள் தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதியுமான கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment