தடுப்பூசி மருந்துகளை ஆர்வத்துடன் பெற்றுக்கொள்ள, மக்கள் முன்வரவேண்டும்.-சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் பைஸல் முஸ்தபா!



ர்வதேசரீதியில் தினமும் மனித மரணங்களை ஆயிரக்கணக்கில் ஏற்படுத்தி, உலகை அச்சுறுத்தி வரும் “கொரோனா” போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கு எதிராக, எம்மை பாதுகாப்பதற்காக ஏற்றப்படும் தடுப்பூசி மருந்துகளை ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பெற்றுக்கொள்வது நம் மக்களின் பொறுப்புமிக்க பணியும் மிக மிக அவசிய தேவையும் பாதுகாப்பு மிக்கதான நடவடிக்கையுமாகும் என்று சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் பைஸல் முஸ்தபா தெரிவித்தார்.

நாடுபூராவும் பல்வேறு கட்டங்களில் தடுப்பூசிகள் எற்றப்பட்டுவரும் இன்றைய சூழலில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலின் கீழ், பொதுச் சுகாதார பரிசோதகர் பைஸல் முஸ்தபாவின் மேற்பார்வையிலும் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இங்கு மக்கள் மத்தியில் பைஸல் முஸ்தபா, கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனினும் சிலர் அடிப்படையற்ற தவறான கருத்துக்களை நம் மக்கள் மத்தியில் பரப்பி, இச்சுகாதார உயிர்காக்கும் மக்கள் பணிக்கு தடைகளையும் ஏற்படுத்தி வருவதால் பாதிக்கப்படுவது நம் மக்களே என்றும் இதனால் எமது எதிர்கால சந்ததிகளுக்கு உயிர் பாதுகாப்பு இன்மையும் அச்சுறுத்தலும் ஏற்படலாம் என்றும் தற்போது வழங்கப்படும் தடுப்பூசி மருந்துகள் சர்வதேச அங்கீகாரத்துடனும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்தலின் கீழும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார அமைச்சின் விசேட தொற்றுநோய் தடுப்பு வைத்திய நிபுணர் குழுக்கள் மூலமும் பரிசிலனை செய்யப்பட்டு அவர்களின் மேற்பார்வையின் கீழும் தொடராக வழங்கப்பட்டு இன்று அதனால் வெற்றியும் கண்டு, உலகமே உயிர் காக்கப்பட்டு வருகின்றமை நிறுபனமாகி வருவதை எமது மக்களும் புரிந்து கொண்டு, நம் சந்ததிகளையும் எம்மையும் பாதுகாக்க தயங்காது தடுப்பூசி மருந்துகளை பெற்று உயிர் காக்கும் மக்களாய் வாழ, மக்கள் சுகாதார பரிசோதகராய் மக்களுக்காக நாம் எனும் நம் சுகாதார பணிக்காக அழைப்பு விடுக்கிறேன். என்றும் தெரிவித்தார்.

இன்றைய தினத்தில் பலர் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :