வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் நான்கு கேஸ் அடுப்புகள் வெடிப்புச் சம்பவம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் நான்கு கேஸ் அடுப்புகள் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் இரண்டு கேஸ் அடுப்புகள், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதியில் தலா ஒரு கேஸ் அடுப்புகள் என நான்கு கேஸ் அடுப்புகள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை உடைந்து சேதமாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த வீட்டில் இருந்தவர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், கேஸ் அடுப்புக்கள் மாத்திரமே வெடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

எரிவாயு அடுப்புக்கள் அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வெடிப்பதால் மக்கள் அவதானமாகவும், முன் எச்சரிக்கையுடனும் இருந்தமையால் உயிர் பாதிப்புக்கள் இடம்பெறாத வண்ணம் காணப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :