நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸின் ஒழுங்கமைப்பில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (2) நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். லத்திப், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், படை அதிகாரிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில், வட கீழ் பருவ பெயர்ச்சி மழைக்கு முதல் அனர்த்த முன் ஆயத்த திட்டங்கள் தொடர்பாகவும், வெள்ள நீர் தேங்கும் இடங்களை அகற்றுவது, அனர்த்த தயார்படுத்தலை செய்வது, கிராம மட்டத்தில் அனர்த்த குழுக்களை வலுப்படுத்தல் , முன்னெச்சரிக்கை பொறிமுறைகளை விருத்தி செய்தல், வெள்ளம், சூறாவளி அனர்த்தங்கள் ஏற்படும் போது எவ்வாறு நடந்து கொள்ளல் தொடர்பாகவும் மற்றும் நலன்புரி இடங்களின் விஸ்தரிப்பு. அவசர உதவி பொருட்கள், மூன்று பிரதேசங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயற்பாடுகள், வெள்ள அனர்த்த திட்டங்கள், சேமிப்பு உபகரணங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
0 comments :
Post a Comment