பாடசாலை சூழலை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பங்களிப்புடன் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளுதல் " திட்டத்தின் செயலமர்வு கிண்ணியாவில்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
"பாடசாலை சூழலை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பங்களிப்புடன் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ளுதல் " எனும் தொனிப்பொருளின் கீழ் முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி கோட்டக் கல்விக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இடம் பெற்றன. குறித்த நிகழ்வுகள் இன்று (29) அலிகார் மகாவித்தியாலம், விநாயகர் மகாவித்தியாலயம், தாருல் உலூம் மகாவித்தியாலயம், அல் அமீன் வித்தியாலயம், காக்காமுனை முஸ்லிம் கலவன் பாடசாலைகளில் இடம் பெற்றுள்ளன. கல்வியின் முக்கியத்துவம், தொழில் துறை கல்வி முக்கியத்துவம், பரீட்சைக்கு முகங்கொடுத்தலுக்கான சிறந்த வழிகாட்டல் உள்ளிட்ட பல விடயங்கள் வளவாளர்களைக் கொண்டு இதன் போது விழிப்புணர்வூட்டப்பட்டன. 10ம் தரத்தில் கல்வி கற்கின்ற சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர். எதிர் வரும் காலங்களில் கா.பொ.தா.சாதாரண தரப் பரீட்சையின் முக்கியத்துவம், தொழில் துறை வழிகாட்டல் வாய்ப்புக்கள், மாணவர்களின் குறித்த துறைசார் கற்றல் தெரிவு முறை, பரீட்சையில் சித்தியடையாத போதும் முறைசாரா உள்ளகக் கல்வி முறை ஊடான கற்றல்,தகவல் தொழில் நுட்ப கற்றல் முறை என்பனவும் இதன் போது மாணவர்களுக்காக தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும் குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றார்களுக்கான விழிப்புணர்வும் இடம் பெற்றன.குறித்த பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை பைகளும் வழங்கப்பட்டன.

பாடசாலை முகாமைத்துவ குழு, பாடசாலை அபிவிருத்தி நிருவாகக் குழு, பழைய மாணவர் சங்க உறுப்பினர்களை சேர்ந்தவர்களுக்கும் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் ஆற்றலை மேம்படுத்தும் பயிற்சியும் வெவ்வேறாக இடம் பெற்றுள்ளன. இவ் நிகழ்ச்சித் திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் வழங்கியிருந்தன.

குறித்த செயலமர்வுக்கு வளவாளர்களாக ஓய்வு நிலை அதிபர் எம்.பி.எம்.முஸ்தபா,ஓய்வு நிலை ஆசிரியர் ஏ.டபிள்யூ.முஹ்சீன் ,சட்டத்தரணி முஸ்தபா அஸாட் உள்ளிட்டோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.நசூகர்கான், பிரதி கல்வி பணிப்பாளர் எம்.சி.நசார், ஆலோசனை மற்றும் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா,முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் முகாமையாளர் நாதியா ஹமீட், மாவட்ட இணைப்பாளர் டீ.சலீம், வெளிக்கள உத்தியோகத்தர் ஏ.ஜீ.எம்.பஹீ உட்பட அதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :