சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதி 275 கிலோமீற்றர் நீளமான பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் நீளமான வீதி பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கும்
இந்நிகழ்வில் வீதிகள்,நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் அரசாங்க பிரதம கொறோடா கௌரவ அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களும்
சவூதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல்மர்ஷாத் அவர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தை பாராளுமன்ற உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சதாசிவம்வியாழேந்திரன் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல் அவர்களும்,ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.நழீம், மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சர்வானந்தா அவர்கலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.மேலும் இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் முக்கியஸ்த்தகர்கள்,மதகுருமார்கள்,பொதுமக்கள் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment