கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அணுசரனை மற்றும் வழிகாட்டலில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடாத்திய குறும்படப்பட்டறை
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் சுகாதார வழிமுறைகளுடன் (29) நாவிதன்வெளி கலாசார மண்டபத்தில் காலை 09மணிக்கு நடைபெற்றது.
கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடாகியிருந்த இந்நிகழ்வில் பிரதான வளவாளராக சர்வதேச மற்றும் தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குணர் சந்திரப்பிள்ளை ருவுதரன் கலந்து கொண்டு பங்குபற்றுனர்களுடன் உரையாடினார்.
இக்குறும்படப்பட்டறை நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு.பி.பிரணவரூபன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.இ.லதாகரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்ஸான்
கிராம நிருவாக உத்தியோகத்தர் மனோஜ், முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அஸாத், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.சுஜீவனி, கிழக்கு மாகாண கலாசார உத்தியோகத்தர் வி.நகுல நாயகி, மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.அன்பாஸ், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் குறும் திரைப்படம், நாடக கலைத்துறையின் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது சர்வதேச குறும்திரைப்பட விழாவுக்காக தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வது தொடர்பான விழிப்புணர்வு குறும்திரைப்படம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன்
கலந்து கொண்டவர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment