நாவிதன்வெளி பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமான சொறிக்கல்முனை கிராம ஒருதொகுதி வசதியில்லாத மக்களுக்கு கனடாவாழ் மதியழகனின் நிதியுதவியில் உலருணவுநிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிவாரணம் வழங்கும் வைபவம், நேற்று காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
கனடாவில் வசிக்கும் இலங்கையரான சமுகசெயற்பாட்டாளர் த.மதிழயகன் இந்தப்பிரதேசமெங்கும் விஜயம்செய்திருந்தார்.
அவரிடம் பேசி இதற்கான ஏற்பாட்டை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மேற்கொண்டிருந்தார்.
கனடாவாழ் மதியழகன் கலந்துகொண்டு நிவாரணங்களை வழங்கிவைத்தார்.
0 comments :
Post a Comment