கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறையை முன்னேற்றும் நோக்கில் மேற்கொண்டுவரும் நடவடிக்கையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ஓட்டமாவடியில் இடம் பெற்றது.
ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பாலர் பாடசாலை 38வது மாணவர் வெளியேற்று விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆணையாளரை இயக்குனர் சபை உறுப்பினர்கள் கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
தலைவர் எம்.எம்.எம்.ஜெஸ்லின் தலைமையில் கூட்டுறவு சங்க கோப் கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் சட்டத்தரணி எம்.எம்.எம்.ராஸிக், கூட்டுறவு திணைக்களத்தின் மட்டக்களப்பு தலைமைக்காரியாலய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்
எம்.ஐ.எம்.உசனார், ஓட்டமாவடி கூட்டுறவு சங்க கூட்டுறவு அபிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம். அஹமட் ஹாதி, கூட்டுறவு அபிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.எம்.பாறூக், கே.மங்களன், என்.ரீ.எம்.ஜாக்கீர் மற்றும் கூட்டுறவுச்சங்க இயக்குனர் சபை உறுப்பினர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மியின் சேவையை பாராட்டி கூட்டுறவுச்சங்க தலைவர் இயக்குனர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
0 comments :
Post a Comment