மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிப்பாளர் பிரிவு மாகாண வைத்தியசாலைகளிடையே நடாத்திய போட்டியில் 5பெரும் விருதுகளைப்பெற்று ஆரையம்பதி மாவட்டவைத்தியசாலை முதலிடம் பெற்று சாதனைபடைத்துள்ளது.
ஆரையம்பதி மாவட்டவைத்தியசாலையின் பொறுப்புவைத்தியஅதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் திருநாவுக்கரசு கௌரிசங்கரன் இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.
மாவட்டத்திலுள்ள கிழக்குமாகாணசபைக்குட்பட்ட சுகாதாரநிறுவனங்களிடையே நடாத்தப்பட்ட சிறந்த செயற்றிறனுக்கான போட்டியில், மாவட்டத்திலேயே முதல் இடம்பெற்றுச்சாதனை படைத்த ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சிறந்த ஆரோக்கிய வாழ்வு நிலையப்போட்டியிலும் முதலிடம் பெற்றது.
ஆரம்ப சுகாதார பராமரிப்பு திட்டம் 2019 2010 ஆம் ஆண்டுக்கான போட்டியில் இரண்டாமிடத்தையும் ஆய்வுகூட சேவைகள்;போட்டியிலும் சிறந்த மருந்துக்களஞ்சியசாலை மற்றும் மருத்துவழங்கல் சேவையிலும் சிறப்பு பாராட்டு விருதுகளையும் சுவீகரித்துக்கொண்டது.
அதற்கான விருதுகள் இவ்வாண்டுக்கான செயற்றிறன் விருது வழங்கும் விழாவில்வைத்து வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டு இவ்விருதுகளை வழங்கிவைத்தார்.
ஆரையம்பதி மாவட்டவைத்தியசாலையின் பொறுப்புவைத்தியஅதிகாரி வைத்தியகலாநிதி டாக்டர் திருநாவுக்கரசு கௌரிசங்கரன் இவ்விருதுகளைப்பெற்றுக்கொண்டார். தாதியபரிபாலகி திருமதி ரஜனி யோகேஸ்வரன் தலைமையிலான குழுவினரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தொடர்ச்சியாக 3ஆம் இடத்தை பெற்றுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment