இராணுவத்தின் 242வது படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு



ஏ.எல்.றியாஸ்-
பொத்துவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் வேண்டுகோளுக்கிணங்க, இராணுவத்தின் 242வது படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) கோமாரி பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 242வது படைப்பிரிவில் இடம்பெற்றது.
வைத்தியசாலை இரத்த வாங்கிகளில் நிலவும், குருதிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில், இராணுவத்தின் 242வது படைப்பிரிவு குறித்த இரத்ததான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

242வது படைப்பிரிவின், கட்டளை அதிகாரி பிரிகேடியர் டீ.சி.பீரிஸின் தலைமையில், சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஜானக விஜயரத்னவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு வைத்தியர் டொக்டர் டீ.என்.எம்.தர்மதிலக மற்றும் டொக்டர் எஸ்.பெர்ணான்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், மற்றும் இராணுவ வீரர்கள் என 74பேர் இரத்தம் தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :