கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நடமாடும் சிகிச்சை பிரிவு இன்று கல்முனைக்குடி நகர மண்டப வீதியில் திறந்து வைப்பு !நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ், றாஸிக் நபாயிஸ்-
ல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நடமாடும் சிகிச்சை பிரிவு கல்முனைக்குடி நகர மண்டப வீதியில் இன்று (13) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை தவிசாளர் டாக்டர் எம் ரிசான் ஜெமீலின் ஆலோசனைக்கு அமைவாக மக்களின் காலடிக்கு மருத்துவ சேவையை கொண்டு செல்லும் எண்ணக்கருவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சுகாதார நல நடமாடும் சேவை பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ஹோமியோபதி நிபுணர் டாக்டர் எம் ஐ எம். முனீர் தலைமையில் நடைபெற்ற இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக சுகாதார நல நடமாடும் சிகிச்சை பிரிவை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் புவனேந்திரன், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ், கல்முனை சாஹிரா கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் எம் ஐ ஜாபிர் உட்பட பெருந்தொகையான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

இதன் போது கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணையுடன், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்

இந்த நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி, செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்

இதன் போது மர்ஹூம் டாக்டர் ஜெமீல் அவர்களின் ஞாபகார்த்தமாக தேவையுடைய வசதி குறைந்த 100 குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புக்கான நிதி உதவிகள் கையளிக்கப்பட்டதோடு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது
மேலும் கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை அதன் ஸ்தாபகர் மர்ஹூம் டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்தமாக முன்னெடுத்து வரும் பல்வேறு சமூக நலத் திட்டத்தின் ஒர் அங்கமாக இதன் போது இலவச கண் சிகிச்சை முகாம், உடற் பரிசோதனை மற்றும் இரத்தப் பரிசோதனை ஆகியனவும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :