சாய்ந்தமருது சற்குரு மகாமின் வருடாந்த மௌலித் மஜ்லிஸும், கொடியேற்றமும்.

நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்-
ல் மதாத் யா கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களின் நினைவாக வருடா வருடம் , சாய்ந்தமருது சற்குரு மகாம் ஷாவியதுல் வாஹிதிய்யா வ ஹல்லாஜியாவில் நடைபெறும் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும் இம்முறையும் இன்று (11) மாலை சாய்ந்தமருது சற்குரு மகாம் தலைவர் எம்.எம்.எ.ஜப்பார் தலைமையில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.

வழமையாக வெகுவிமர்சையாக நடைபெறும் இந்நிகழ்வு இம்முறை கொரோனோ தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு மாத்திரமே சுகாதார நடைமுறைகளை பேணி அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மௌலவிமார்களின் மௌலித் முழக்கத்துடன் நிகழ்வின் பிரதம அதிதி அஸ்ஸெய்யித் மக்கத்தார் அப்துல் மஜீத் கலீபத்துல் ஹல்லாஜ் அவர்களினால் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சற்குரு மகாம் செயலாளர் ஏ.சி.எம்.நிஸார், பொருளாளர் எம்.எம். பஸ்மீர், உட்பட நிர்வாகிகள், சற்குரு மகாமின் முக்கியஸ்தர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :