வைத்தியர்களை கௌரவிக்கும் நிகழ்வு



பைஷல் இஸ்மாயில் -
ல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் சேவை காலத்தைப் பூர்த்தி செய்து பிரியா விடை பெற்றுச்செல்லும் வைத்தியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.வை.இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.வை.இஸ்ஹாகினால் விடைபெற்றுச் செல்லும் வைத்தியர்களான திருமதி ஏ.ஆர்.எப்.றிவ்சியா மற்றும் பீ.ஜே.ரோஷான் ஆகியோர்களுக்கு நினைவுச்சின்னத்தை வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.ஏ.நபீல், திறந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் சமூகவியல் பீடாதிபதி முஹம்மட் ஜாபர், காரைதீவு மருந்தக வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சி.எம்.ஹாலித் உள்ளிட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :