மலையகத்தில் ஆசிரியர்களின் போராட்டம்க.கிஷாந்தன்-
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்டிருந்த பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்று (25) வழமைக்கு திரும்பியிருந்த நிலையில் 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சென்று கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டனர்.

இருந்த போதிலும் அதிபர், ஆசிரியர்கள் கடந்த 24 வருடங்களுக்கு மேலாக எதிர் கொண்டு வரும் சம்பள முறன்பாட்டை தீர்க்க கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (25) திங்கட்கிழமை வழமையான பணிக்கு சென்ற ஆசிரியர்கள் மதியம் 02 மணியுடன் பாடசாலை நேரம் முடிந்த பின் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் தமது சம்பள முரன்பாட்டை தீர்க்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வீதியில் இறங்கி மேலும் ஒரு போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அந்தவகையில் மலையகத்தில் நுவரெலியா, அட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ, கினிகத்தேனை, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரபத்தனை, டயகம, வலப்பனை, இராகலை போன்ற பகுதிகளிலும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் போது பாடசாலைகளை சேர்ந்த அதிபர், ஆசிரியர்கள் சுலோகங்களை ஏந்தி கோஷமிட்டு தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும், 24வருட காலமாக நிலவிவரும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை பெற்றுதருமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, இலங்கையின் ஆசிரியர் சமூகம் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தின் கௌரவத்தையும், முன்னேற்றத்தையும் பாதுகாக்க இந்த நாட்டின் அதிகாரிகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம் எனவும் 1997மற்றும் 2006ஆகிய வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட சம்பளத்திட்டத்தை அமுல்படுத்தப்படாமையை கண்டித்தும் அதிபர், ஆசிரியர் சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமை, உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாமை, கொவிட் 19 குறித்து முழுமையான வசதிகள் பாடசாலைகளுக்கு செய்துக்கொடுக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :