மடத்தடி மீனாட்சி அம்மனாலய தலைவராக தவிசாளர் ஜெயசிறில் தெரிவுவி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய தலைவராக பிரபல சமுகசேவையாளரும், காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவுசெய்யப்பட்டார்.

அவசர ஆலய பரிபாலனசபைக்கூட்டம் நேற்று(24)ஞாயிற்றுக்கிழமை மீனாட்சிஅம்மன் சந்நிதானத்தில் ,பரிபாலனசபைச்செயலாளர் கே.சண்முகம் தலைமையில் நடைபெற்றபோது இத்தெரிவு ஏகமனமதாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த 10வருடங்களாக ஆலயத்தலைவராக இருந்துவந்த கோ.கமலநாதன் கடந்த வியாழனன்று(20) காலமானதையடுத்து,புதிய தலைவரைத் தற்காலிகமாகத் தெரிவுசெய்யும் கூட்டம் இடம்பெற்றது.

முன்னதாக இறைபதமடைந்த தலைவர் கோ.கமலநாதனின் மறைவையிட்டு 2நிமிடநேரம் மௌன ஆத்மாஞ்சலி நடாத்தப்பட்டது.அனைவரும் எழுந்துநின்று அவருக்கான அஞ்சலியைச்செலுத்தினர்.

ஆலய போசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட ஆலயபரிபாலனசபையின் நிருவாகசபை உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

பலநூற்றாண்டு பழைமைவாய்ந்த பழம்பெரும் மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய ஆலய கும்பாபிசேகத்தையொட்டிய ஆலயபுனருத்தாபனப்பணிகள் பற்றி கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

கும்பாபிசேகத்தை அடுத்தவருட முற்பகுதியில் சிறப்பாக நடாத்தவேண்டிய பணிகள் அனைத்தையும் தற்போதிருந்தே மேற்கொள்வது என்று தீர்மானமாகியது. ஆலய உபதலைவராகவிருந்து பணியாற்றிய தவிசாளர் கி.ஜெயசிறில் வருடாந்தபொதுக்கூட்டம் வரையில் தற்காலிக தலைவராக தெரிவுசெய்யப்பட்டதையிட்டு பலரும் வாழ்த்துக்களைக்கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :