கிழக்கில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்: பொலிசாரும் கண்காணிப்பில்.!வி.ரி.சகாதேவராஜா-
கொரோனா நீண்ட விடுமுறையின்பின்பு கிழக்கில் நேற்று(21)வியாழக்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன .

கல்விஅதிகாரிகள் பாடசாலைகளுக்க விஜயம்செய்து கண்காணிப்பிலீடுபட்டதுடன் வரவு அறிக்கைகளுடன் செவ்வைபார்த்தல் பட்டியலையும் பூர்த்திசெய்மு அறிக்கைசெய்தனர்.

அதேவேளை பொலிசாரும் சகல பாடசாலைகளுக்கும் சென்று காலை முதலே கண்காணிப்பிலீடுபட்டதுடன் வரவு அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டனர்.

மாணவர் வரவு அதிபர் வரவு ஆசிரியர்வரவு கல்விசாரா ஊழியர்களின் வரவு என்பன முக்கியமாகக்கவனிக்கப்பட்டது.

மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்தோடு வருகைதந்திருந்தனர். வகுப்பறையில் சிலரும்வெளியேயும் அநாயாசமாக மாணவர்கள் திhந்தனர்.ஆசிரியர்களும் அவ்வாறே தத்தமது கருமங்களில் ஈடுபட்டனர்.

கிழக்கிலுள்ள 13வலயங்களிலும் பாடசாலைகள் திறக்கப்பட்டன என்று கிழக்குமாகாணகல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அறிவித்துள்ளார்.
நேற்று அவர் சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களின் அறிக்கைகளைப்பெற்று இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நேற்று சகல வலயக்கல்விப்பணிமனைகளுக்கும் பாடசாலைமீளஆரம்பிப்பதைக்கண்காணிக்கும் மாகாண கண்காணிப்புக்குழு விஜயம்செய்தன.
மாகாணத்தில் 200மாணவர்களுக்கு குறைந்த ஆரம்பவகுப்புக்களைக்கொண்ட 568பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :