தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியை கொண்டாடும் முகமாக வெள்ளி விழா மற்றும் ஸ்தாபகர் தினம் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் இதனை முன்னிட்டு அதன் நினைவாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று (21.10.2021) பல்கலைக்கழக நுழைவாயில் அருகாமையில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் கலந்து கொண்டு மரம் நடும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட 25 ஆவது ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு தற்போது நாட்டில் காணப்படும் கொரோனா கொவிட் - 19 வைரஸ் பரவல் நிலைமையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இந் நிகழ்வுகளை மிகவும் கோலகலமாக குறிப்பிட்ட தொகைகளைக் கொண்டோர்களின் பங்குபற்றலுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிருவாகம் மேற்கொண்டு வருவதாகவும் இதனை முன்னிட்டே மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற மரங்கள் நடும் நிகழ்வில், பல்கலைக்;கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசீல், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட், நிதியாளர் பஸிலூர் றகுமான், வேலைப் பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பஸீல், திணைக்களத் தலைவர் றிப்தி, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.எம்.முனீப், பிரதிப் பதிவாளர் ஏ.தையூப், அழகுபடுத்தல் திணைக்கள அதிகாரி (கியூரேட்டர்) ஏ. சம்ஸார், விடுதிப் பணிப்பாளர் யூ.எல்.மன்ச10ர், பிரதம பாதுகாப்பு அதிகாரி ஏ.எம்.ஜாபீர், உதவிப் பதிவாளர் வீ.முகுந்தன், உதவி நிதியாளர் எஸ்.எம்.சஹீத் மற்றும் நிருவாக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :