காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கு சம்மாந்துறை நீதிமன்றம் தடைஉத்தரவு!



காரைதீவு சகா-
ம்மாந்துறைபிரதேச நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் தியாகி திலீபனின் 34வது ஆண்டு நினைவு தினநிகழ்வுகளை தடைசெய்யும் விதமாக, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு தடை உத்தரவு கடிதத்தை வழங்கியுள்ளது.
நேற்று(26) அவரின் இல்லத்திற்கு சென்று சம்மாந்துறைப்பொலிசார் தடை உத்தரவு கடிதத்தை கையளித்தனர்.

சம்மாந்துறைபொலிஸ் நிலையத்தின் பிரதானபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயலத் தாக்கல்செய்த அறிக்கையினடிப்படையில், இந்த நீதவான் நீதிமன்ற கட்டளை பிறப்பித்துள்ளது.

அதன்படி ,சம்மாந்துறைப்பிரதேச நியாயாதிக்க எல்லைக்குள் யுத்தத்தினால் இறந்தவர்களின் நினைவேந்தலையோ ,ஊர்வலங்களையோ, விளக்கேற்றலையோ நடாத்தமுடியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :