கல்முனையில் அஷ்ரஃப்பின் "தலைவர் தின" நிகழ்வு!



நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 21வது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் கல்முனை மக்கள் பணிமனையில் இன்று(16) வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு சுகாதார வழிகாட்டல்களுக்கு ஏற்ப இடம்பெற்றது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தார்,ஏ.சி.ஏ சத்தார்,எம்.எஸ் நிசார்(ஜேபி),ஏ.எம் பைறோஸ்,உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களான தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பி ஜெளபர்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, மெளலவி.டி நெளபர் அமீன்(வாஹிதி),மெளலவி அல்ஹாஜ் எம்.எம் ஜமாலுடின்(ஹாஸிமி) கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மறைந்த பெருந் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரோஸன் அக்தார்,எம்.எஸ் நிஸார்(ஜே.பி),ஏ.சி.ஏ சத்தார் ஆகியோர்களால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் மறுமைவாழ்வின் ஈடேற்றத்திற்காக விஷேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச். எம். எம். ஹரீஸ் அவர்களின் காரியாலயமானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரியாலயமாக கடந்த 31 வருடங்களாக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் காலத்திலிருந்து இயங்கிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :