பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஆகியோர் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.



தேர்தல் முறைகளிலும், சட்டங்களிலும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் புதன்கிழமை (22) புதிதாக இருவர் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

சிறுபான்மையின கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஆகியோர் பிரஸ்தாப பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தத் தெரிவுக் குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இடம் பெற வேண்டியதன் அவசியம் ஆரம்பத்திலிருந்தே பல தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரஸ்தாப தேர்தல் சட்டம், தேர்தல் முறைமை சம்பந்தமான தெரிவுக் குழுவின்முன் தோன்றி சாட்சியமளிக்க இருக்கின்றது.

இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவுக் குழுவின் முன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாக்கு மூலங்களை நெறிப்படுத்துவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :