சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 24 வீடுகள் நிர்மாணம் !



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் மீள்குடியேற்றப்பட்ட பயனாளிகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 24 வீடுகள் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத் திட்டத்திற்கு அமைய பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கும் நிகழ்வும் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். எம் ஹனிபா தலைமையில் நேற்று(17) நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

ஆரம்பமாக சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் சம்மாந்துறை - 12, மல்வத்தை - 02 மற்றும் வீரமுனை - 01 மீள்குடியேற்ற கிராம சேவகர் பிரிவுகளில் நடைபெற்றது.

மேலும் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில்
2021 ஆம் ஆண்டிற்கு மல்வத்தை 01- 09
மல்வத்தை 02 - 03
வீரமுனை 01 - 09
வீரமுனை 04 - 01
சம்மாந்துறை 12 - 02 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

குறித்த வீடுகள் கட்டுமான பணிகளுக்கு
பத்து இலட்சம் ரூபாய் செலவில்
17 வீடுகளும் ஆறு இலட்சம் செலவில் 07 வீடுகளும் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எல்.ஏ. மஜீட் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. அலியார் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :