கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் 20 வயது தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட வர்களுக்கானமுதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை ஞயற்றுகிழமை(19) ஆம்திகதி
(காலை 8. 00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை) மற்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை
( 21) ஆம் திகதி (காலை 8.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை ) கல்முனை ,மருதமுனை,நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் 05 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெறவுள்ளதாககல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம். அஸ்மி தெரிவித்தார்.
கல்முனை பிரதேசத்தில்
அல் - பஹ்ரியா தேசிய பாடசாலை
அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலம்
மருதமுனை பிரதேசத்தில் அல் - மனார் தேசிய பாடசாலை ( ஆரம்ப பிரிவு) ,அல்- மதீனா
வித்தியாலயம் , நற்பிட்டிமுனை பிரதேசத்தில் அல்- அக்ஸா மகா வித்தியாலயம் என்பவற்றில் மேற்குறித்த இருநாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெறவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் வழிகாட்டலில் கல்முனை பிராந்தியபணிமனை பிரிவில் உள்ள 13 வைத்திய அதிகாரி பிரிவுகளில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment