நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்படட தீர்மானம் பின்வருமாறு:
01. ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடுகள் பற்றி மேலெழுந்துள்ள நிலைமைகள் தொடர்பாக அமைச்சரவை விரிவாகக் கலந்துரையாடியுள்ளது. அதற்கமைய, இவ்விடயத்திற்குரிய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு இப்பிரச்சினை தொடர்பாக மேலதிக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக
கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை உள்ளடக்கியதான அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
• கௌரவ டளஸ் அழஹப்பெரும அவர்கள்
மின்சக்தி அமைச்சர்
• கௌரவ விமல் வீரவங்ச அவர்கள்
கைத்தொழில் அமைச்சர்
• கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள்
சுற்றாடல் அமைச்சர்
• கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள்
சுற்றுலாத்துறை அமைச்சர்

0 comments :
Post a Comment