மக்களின் பொறுப்பற்ற நிலை தொடர்ந்தால் சாவினை விட வறுமை தாண்டவமாடும் - சபா.குகதாஸ்



யாழ் லக்சன்-
நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் தீவிர நிலை தொடர்பில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் பொதுமக்கள் தேவையற்ற கொண்டாட்டங்கள், விழாக்கள், ஒன்று கூடல்கள், போன்றவற்றை முற்றாக தவிர்த்து முடிந்தவரை வீட்டில் பாதுகாப்பாக தங்கி இருங்கள் சுகாதார வழி முறைகளை முறையாக பின்பற்றுங்கள் இது உங்கள் பாதுகாப்புடன் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
நாட்டில் தற்போது கொரோனாப் பிறழ்வு பாரிய தொகையில் தொற்றாளர்களை அதிகரிக்கச் செய்துள்ளது இதனால் சாவு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது இதனை சுகாதார வைத்திய துறை உறுதி செய்துள்ளது.

நாட்டில் சுகாதார மருத்துவ வசதிகள் தொற்றாளர் அதிகரிக்கும் போது போதியதாக இல்லை என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதனால் வீடுகளில் தொற்றாளர்களை தங்க வைக்கும் நிலை உருவாகியுள்ளது.
நாட்டின் வருமானம் என்றும் இல்லாத வகையில் மிக கீழ் நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இயன்றவரை அரசாங்கம் இறக்குமதிகளை நிறுத்தி வருகின்றது. இதனால் அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகள் பன்மடங்கு விலை அதிகரிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது மிக ஆபத்தானது.

அந்நியச் செலாவணி வருமானம் வீழ்ச்சியடைந்தமையால் இலங்கையில் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது இதனால் இறக்குமதிப் பொருட்களின் விலையை மடங்காக அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்தை கோருகின்றனர் இது மிகப் பெரும் பொருளாதார வறுமையை உருவாக்கியுள்ளது. உதாரணமாக 480/= ரூபா பால்மாவை 740/= ரூபாவிற்கு விற்க அனுமதிக்குமாறு அரசை கோரியுள்ளனர்.

இதனை விட மிகப் பெரும் நெருக்கடி உருவாகவுள்ளது நாட்டின் கஐானாவில் டொலர் இன்மையால் எரிபொருள் இறக்குமதியும் தடைப்படும் மிகப் பெரும் அபாயம் காத்திருக்கிறது அவ்வாறு ஒன்று நிகழும் போது நாட்டின் 90% மான செயல் நடவடிக்கைகள் முடங்குவதுடன் கொரோனா மரணங்களின் அபாயத்தை விட கொடிய வறுமை கோரத் தாண்டவம் ஆடுகின்ற நிலை ஏற்படவுள்ளது.
இதனை தடுக்க அனைத்து மக்களும் இயன்றவரை கட்டுப்பாடுகளை பின்பற்றுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :