வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய அதிபர் அல்ஹாஜ் என்.எம்.ஹஸ்ஸாலி அவர்களின் மரணச் செய்தி அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் தெரிவித்துள்ளார்.
ஹஸ்ஸாலி அதிபர் அனைவரிடமும் நற்குணம் கொண்டு பழகக் கூடிய பன்பான ஒருவராக காணப்பட்டார்.
அவரது மரணம் கல்விச் சமூகத்துக்கு மாத்திரமின்றி அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.
அன்னாரின் பாவங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து உயர்தரமான சுவனத்தை வழங்கவும், குடும்பத்தாருக்கு ஆறுதல் கிடைக்கவும் பிரார்த்திப்பதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
அதிபர் என்.எம்.ஹஸ்ஸாலி அவர்களின் மரணச் செய்தியை அறிந்து கொண்ட அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் தங்களின் அனுதாபங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment