காரைதீவிலுள்ள இலங்கைவங்கிக்கிளை மற்றும் பிரதான தபாலகம் என்பன கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளன என காரைதீவுப்பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டர்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
இலங்கைவங்கிக்கிளையில் மூன்று ஊழியருக்கும், தபாலகத்தில் ஒரு ஊழியருக்குமாக மொத்தம் நால்வருக்கு கொ ரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நால்வரில் மூவர் காரைதீவைச்சேர்ந்தவர்கள். ஒருவர் அம்பாறையைச்சேர்ந்தவர். அனைவரும் கொவிட் இடைத்தங்கல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவை இழுத்துமூடப்பட்டன. அங்கு பணியாற்றிய ஏனையோர் தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளனர். என வும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இதுவரை மாளிகைக்காடு மாவடிப்பள்ளி காரைதீவு அடங்கலான இக் காரைதீவு சுகாதாரப்பிரிவில் இதுவரை 307பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி 282பேர் குணமாகியுள்ளனர். இறுதியாக 6பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். தற்போது 19பேர் மாத்திரமே சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இதுவரை மாளிகைக்காடு மாவடிப்பள்ளி காரைதீவு அடங்கலான இச்சுகாதாரப்பிரிவில் 6பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளனர்.

0 comments :
Post a Comment