உரப்பையில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு; வாழைச்சேனையில் சம்பவம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ரப்பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்றிரவு (5) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை பொதுச் சந்தையில் அமைந்துள்ள கடை ஒன்றில் இருந்தே பெண்ணின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வாழைச்சேனை அல்லாப் பிச்சை வீதியைச் சேர்ந்த 60 வயதுடைய முகம்மத் ஹனீபா சித்தி லைலா என்பவர் நேற்று காலை 11 மணியளவில் வங்கிக்குச் சென்றபோது வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பெண்ணை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றதாகவும் அவரே பெண்ணை கொலை செய்துள்ளதாகவும் பெண்ணின் கணவர் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் மாவடிச்சேனை எம்.பி.சீ.எஸ்.வீதிலுள்ள வளர்ப்பு மீன் கடையில் வைத்து கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் உரப்பையில் போட்டு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று வாழைச்சேனையிலுள்ள கடையில் கொலை செய்த நபர் வைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வாழைச்சேனையிலுள்ள குறித்த கடை உரிமையாளரிடம் பேக் ஒன்றை கொண்டு வந்த நபர் அதனை தனது கடையில் வைத்து விட்டு சிறிது நேரத்தின் பின் எடுத்துச் செல்வதாக கூறி பேக்கை வைத்துச் சென்றுள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

குடும்பத்துக்குள் ஏற்பட்ட கொடுக்கல், வாங்கல் முரண்பாடே இக் கொலைக்கு காரணம் என்று மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக பெண்ணை கொலை செய்த நபரையும், பெண்ணின் சடலம் வைக்கப்பட்ட கடை உரிமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :