ஜனாதிபதியின் வீடு இல்லாதோருக்கு வீடு வழங்கும் சௌபாக்கியா விசேட விடமைப்புத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா விசேட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் ஆறு வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி சமுக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சாஜகான், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை, மாஞ்சோலை, ஓட்டமாவடி ஆகிய பகுதியில் ஐந்து வீடுகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி உதவியும், மக்களின் மேலதிக நிதி பங்களிப்பு மூலமும், காகிதநகர் பகுதியில் ஒரு வீட்டுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஆறு இலட்சம் ரூபாய் நிதி உதவியும், பயனாளியின் நான்கு இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பு மூலமும் ஆறு வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
0 comments :
Post a Comment