சுகாதார பிரிவு மற்றும் இராணுவத்தினர் இணைந்து நட்பிட்டிமுனையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு



எம். என். எம். அப்ராஸ்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் பிராந்திய சுகாதார பிரிவுகளில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கல்முனை தெற்கு சுகாதார பிரிவில்சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி தலைமையில் , கல்முனைப் பிராந்திய இராணுவ மேஜர் சாந்த விஜேயகோனின்

ஒத்துழைப்புடன் நட்பிட்டிமுனை பகுதியில் தெற்கு சுகாதார உத்தியோகத்தர்களுடன் இராணுவத்தினரும் இணைந்து 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாத நபர்கள், தடுப்பூசி நிலையங்களுக்கு வந்துதடுப்பூசியினை பெற

முடியாதவர்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (28) இடம்பெற்றது.
இதன் போது தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள்,

செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :