அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன அனர்த்த முகாமைத்துவ குழு களத்தில் : அக்கரைப்பற்றில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை !!



நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கற்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசிகள் நாடுமுழுவதிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அனர்த்த முகாமைத்துவ குழுவின் உதவியுடன் அக்கரைப்பற்று சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அக்கரைப்பற்று சுகாதார சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து அக்கரைப்பற்றின் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் அனர்த்த முகாமைத்துவ குழு மிகவும் சிறப்பாக இயங்கி பிரதேச பள்ளிவாசல்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர். இக்குழுவின் சிறப்பான செயற்பாட்டினை மக்கள் பெரிதும் பாராட்டி வருவதோடு பெரும்பாலனா வயதானவர்கள் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கு இவர்களின் பங்கு அளப்பெரியதாக அமைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :