லிந்துலை பொது சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம், சென்கூம்ஸ் தோட்டம் மற்றும் லெமலியா தோட்டப்பகுதிகளிலே 66 பேருக்கு தொற்று உறுதியானது.
கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட 49 தொற்றாளர்களுடன் தொடபினை பேணிய 220 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே சென்கூம்ஸ் தோட்டத்தில் 56 பேர், தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 06 பேர் மற்றும் லெமலியா தோட்டத்தில் 04 பேர் என 66 பேருக்கு தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொற்றுக்குள்ளானவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் கடந்த 14 நாட்களில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment