தடுப்பூசி ஏற்றும் சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளவும்.


பைஷல் இஸ்மாயில் -

கொ
விட் 19 வைரஸ் தொற்றுப் பரம்பல் எமது நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகளையும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த ஆபத்தான தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான சிறந்ததொரு தீர்வுதான், நாம் அனைவரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே ஆகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.எல்.எம்.அலியார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் பாலமுனை மின்ஹாஜ் மஹா வித்தியாலத்தில் (24) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.எல்.எம்.அலியார் தனது கொவிட் தடுப்பூசியை ஏற்றிய பின்னர், ஊடகத்துக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டின் அரசினால் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை நாம் ஒவ்வொருவரும் தவறவிடாது பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தத் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பல பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் மட்டுமல் பல அரசியல்வாதிகளும் தங்களின் மாவட்டத்துக்கு கிடைக்கவில்லை என்று போட்டி போட்டுக்கொண்டு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தும் வருகின்றனர்.

ஆனால், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழும் மக்களின் காலடிக்கு இந்த தடுப்பூசி மருந்துகள் கிடைக்கப்பெற்று ஏற்றப்பட்டும் வருகின்றன. எம் பிராந்தியத்தில் வாழும் அனைத்து மக்களும் இச்சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இது எமக்கான பாதுகாப்புக் கவசமாகும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

இந்த தடுப்பூசி மருந்துகளை அரச உத்தியோகத்தர்கள் மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :