கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபரினால் காரைதீவில் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு !



வி.ரி.சகாதேவராஜா-
னாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் 'சௌபாக்கியத்தின் நோக்கு' திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் கடற்கரை வீதியில் வெள்ளியன்று கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இப்புதிய பொலிஸ்நிலையம் காரைதீவு மாளிகைக்காடு சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களை நிருவகிக்கக்கூடியவாறு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் காரைதீவு நிந்தவூர் ஆகிய பெரும்பிரதேச ங்கள் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் உள்ளடங்கியிருந்தன. விரைவில் நிந்தவூர் பிரதேசத்திற்கும் தனியான பொலிஸ்நிலையம் அமையவிருப்பதாகக்கூறப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிராந்திய பொலிஸ் உயரதிகாரிகள் பிரதேச செயலாளர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பிரதம பொலிஸ் பரிசோதகர்கள்இ பள்ளிவாசல்களின் தலைவர்கள் ஆலய பரிபாலன சபையினர் மதகுருமார்கள் கிராம சேவகர்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்து பௌத்த இஸ்லாமிய மதகுருமார்களின் ஆசியுடன் இந்த பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் நினைவாக அதிதிகளினால் மரக்கன்றுகள் நடப்பட்டன. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா பொலிஸ்நிலைய குறிப்பேட்டிலும் கையெழுத்திட்டார் .

.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :