மர்ஹூம் முஹம்மது காசிம் ஆதம்பாவா சுலைஹா பீபி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரராவார்.
இவர் ஆரம்பக் கல்வியை அல் அமான் பாடசாலையிலும் பின்னர்
றியாலுல் ஜன்னா வித்தியாலயம், கல்முனை சாஹிரா கல்லூரியிலும் மற்றும்
வெலிகம அறபா மகா வித்தியாலயத்திலும் அவரது கல்வியை கற்றார்.
1988ஆம் ஆண்டு பயிர்ச்செய்கை உத்தியோகத்தராக நியமனம் பெற்று உள்ளிருப்பு செய்யப்பட்டு 1989ஆம் ஆண்டு கிராம உத்தியோகத்தர் ஆக இருந்து சாய்ந்தமருது 10 ஆம் பிரிவில் கடமை பார்த்துக் கொண்டு சாய்ந்தமருது
9ம் பிரிவு 8-ஆம் பிரிவு 12-ஆம் பிரிவு 14 ஆம் பிரிவு 01ம் பிரிவு 03ம் பிரிவுகளில் பதில் கடமையாக கடமையாற்றினார்
தற்போது 2021.07.29 ஆம் திகதி 33 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெறுகின்றார்
பரம்பரையாக கிராம உத்தியோகத்தர்களாக இவரின் குடும்பத்தினரே இருந்துள்ளனர் இவரின் தந்தையின் பெரிய அப்பா முஹம்மது இப்றாலெப்பை
கிராம உத்தியோகத்தர் அதன் பின்னர் இப்றாலெப்பை கிராம உத்தியோகத்தர் மகன் அப்துல் ஜப்பார் கிராம உத்தியோகத்தர் அவருக்கு அடுத்ததாக இவரின் தந்தையின் உடன் பிறந்த சகோதரர் முஹம்மது மீராசாகிப் கிராம உத்தியோகத்தர் அதற்கு அடுத்ததாக இவர் இப்படி பரம்பரையில் உள்ள கிராம உத்தியோகத்தர்
இவர் 1993 ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் உள்ள கலாபூஷணம் கவிஞர்
ஏ.யூ.எம்.ஏ.கரீம் அதிபரின் கனிஷ்ட புதல்வியை திருமணம் செய்து முப்பெரும் செல்வங்களை பெற்றார்.
இவர் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாயல் நம்பிக்கையாளராகவும்
ஹாஜா ஜஹ்வர்ஷா மக்காம் நிர்வாகத்தில் தலைவராக இருந்து வழி நாடாத்தி தற்போது ஆலோசகராகவும் புனர்வாழ்வு புனரமைப்பு சமூக அபிவிருத்தி சங்கம்,பல சமூக சேவைகள் நிறுவனத்திலும் லக்ஸ்டோ மீடியா உறுப்பினராகவும் சமாதான நீதவானாகவும் இவர் சென்ற 2018ஆம் ஆண்டு லக்ஸ்டோ மீடியா அமைப்பினால் தேசமானி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவர் சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தர் காரியாலய முகாமைத்துவ போட்டியில் தொடர்ச்சியாக முதலாம் இடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அத்துடன் ஸ்ரீலங்கா எக்ஸத் கிராம உத்தியோகத்தர் அம்பாறை மாவட்ட சங்கத்தின் உப செயலாளராகவும் இருந்து சேவையாற்றி வருகின்றார்
என்பது குறிப்பிடத்தக்கது
அவரது ஓய்வு காலம் சிறப்புற்றதாக அமையவும் நீடூழி காலம் வாழ வேண்டும் என்றும் இந்நாளில் பிரார்த்தனை செய்கின்றோம்.
0 comments :
Post a Comment