சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு : 4 சிறுவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில்


மினுவாங்கொடை நிருபர் -

நா
ட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சியை அண்மையில் அவதானிக்க முடிந்த போதிலும், தற்போது மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போக்கினைக் காண்பிப்பதாகவும், இதனால் சிறுவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளதாகவும், சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் கொழும்பு - லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மாத்திரம் 61 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் நால்வர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறுவர்கள் அதிகளவில் தொற்றுக்குள்ளாகின்றமை தொடர்பில், கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் வாசன் ரத்னசிங்கத்திடம் வினவிய போது ,
நாட்டில் நாளாந்தம் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது.

கடந்த 19 ஆம் திகதி 10 சிறுவர்களுக்கும், 20 ஆம் திகதி 10 சிறுவர்களுக்கும், 21 ஆம் திகதி 6 சிறுவர்களுக்கும், 22 ஆம் திகதி 6 சிறுவர்களுக்கும், 23 ஆம் திகதி 6 சிறுவர்களுக்கும், 24 ஆம் திகதி 14 சிறுவர்களுக்கும், 25 ஆம் திகதி 9 சிறுவர்களுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 - 14 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் மாத்திரமின்றி, அவர்களது தாய் தந்தை ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படும் வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் சிறுவர் வைத்தியசாலைக்கு தமது குழந்தைகளை சிகிச்சைக்காக அழைந்து வந்த பெற்றோருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 18 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் சகல சிறுவர்களுக்கும் இனிமேல் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும். இதன் போது பெற்றுக் கொள்ளப்படும் மாதிரிகளில் சந்தேகத்திற்கிடமானவை, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

சமூகத்தில் இன்னும் இனங்காணப்படாத தொற்றாளர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். என்பது ஸ்திரமாகும். வழமையை விட சிறுவர்கள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகமாகக் காணப்படுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :