மினுவாங்கொடை நிருபர் -
18 வயதுக்குக் குறைவான பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி
செலுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடும்போது, மாணவர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசிகளைச் செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில், சுகாதாரத்துறையின் விசேட நிபுணர்களுடன் இணைந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, ஜப்பானிலிருந்து நன்கொடையாகக் கிடைக்கவுள்ள 14 இலட்சத்து 70 ஆயிரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள், அடுத்தவாரமளவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment