வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதமை காரணமாக நாடாவிய ரீதியில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடையாற்றும் சுகாதார பணிக்குழவினர் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12.00 முதல் 1.00 மணிவரை அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் வைத்தியசாலை முன்பாக அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சகல ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்புக்கான மேலிதக கொடுப்பனை வழங்கு, வைத்தியசாலையில் உள்ள சிற்றூழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய், ஒரு வார்த்திற்கு மேலதிகமாக கடடை செய்யும் மணி நேரத்தை சம்பளத்தில் 1ஃ30 வழங்கு, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதியை முறையாக மற்றும் இலவசமாக வழங்குதல், 180 நாட்கள் பூர்த்தி செய்த சகல ஊழியர்களையும் நிரந்தரமாக்கு என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.

சுகாதார துறையிலுள்ள ஆறு தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைத்து பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுநிலையின் கீழ் அவதானம் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் சேவைகள் வழங்கும் அனைத்து ஊழியர்களுக்காகவும் விசேட கொடுப்பனவை வழங்குதல், பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்கதல், அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் விசேட விடுமுறை நாளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு விடுமுறை நாள் கொடுப்பனவு வழங்குதல், கொரோனா தடுப்பு செயற்திட்டத்தை வலுப்படுத்துவதற்காக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் தொழிற் சங்க குழுவொன்று நியமித்தல் மற்றும் தீர்மானங்கள் எடுப்பதற்கு அவசியமாகும் போது அதற்கு சுகாதார செயலாளரின் ஒத்துழைப்பினை வழங்குதல், வைத்தியசாலை கொரோனா குழவிற்காக தொழிற்சங்க பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் தொழிற்சங்க பங்குபற்றுதலுடன் வைத்தியசாலை ஆலோசனை குழு மீண்டும் நடைமுறைப்படுத்தல்.

பதிலீட்டு ஃ அமைய சுகாதார ஊழியர்களை நிரந்தரமாக்குதல், அனைத்து சுகாதார ஊழியர்களையும் ஆட்சேர்ப்பு செய்தல், வெற்றிடங்களை நிரப்புதல் விரைவாக மேற்கொள்ளல், பதிலீட்டு ஃ அமைய சுகாதார ஊழியர்களுக்கு விசேட விடுமுறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் நாளாந்த சம்பளத்தினை செலுத்துதல்,; தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள N95 முகக்கவசம், பாதுகாப்பான உடை ஆகிய வசதிகளை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கு தொடரச்சியாக வழங்குதல், பொது நிர்வாக சுற்றறிக்கையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதன் படி மகப்பேற்று சுகாதார ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குதல், அனைத்து ஊழியர்களுக்கும் செலுத்துகின்ற மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு அழைப்பு கொடுப்பனவு வரையறைகளை நீக்குதல், அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதியை முறையாக மற்றும் இலவசமாக வழங்குதல், சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது சிகிச்சை வழங்குதல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான முறையான முறையொன்றிளை தயாரித்தல் என பதினைந்து கோரிக்கைள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :