நம்பிக்கை இழந்துவிட்டோம்-பிச்சை எடுக்கும்நிலை-வழக்கு தொடர்வேன்: கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் தெரிவிப்பு!J.f.காமிலா பேகம்-
நாட்டைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் சென்று கொண்டிருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார்.

இலங்கைக் கடலில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரத்தில் அரசாங்கம் கொண்டிருந்த பலவீனமான நடவடிக்கையினால்தான் கடல்வளங்களுக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை எதை நோக்கிப் பயணிக்கிறது, யார் நாட்டை ஆட்சி செய்கின்றனர், யாரால் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பன சிக்கல் மிக்கதாக மாறியுள்ளதாகவும் பேராயர் தெரிவித்துள்ளார்.

‘நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்வது அபிவிருத்தியல்ல’ என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நாட்டு வளங்களைவ விற்பனை செய்வது இலகுவான விடயமாக இருக்கும். எனினும், இந்த நாட்டுக்கென்று ஒரு கௌரவம் இருக்கின்றது.

நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பது அனைத்து அரசியல் தரப்பினரதும் பொறுப்பாகும்.

MCC ஒப்பந்தத்துக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, அதற்கு தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.

ஆனால் இன்று, MCCயைவிட அபாயமான ஒன்றை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் அனைத்தும் வீணாகி போயுள்ளது” என்றும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடல்வளத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக மீனவ அமைப்புக்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :