வாகனங்களின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளொன்றுக்கு 15 வகை வாகனங்களின் விலை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிதி தளம்பல் அச்ச நிலை காரணமாக சிலர் வாகனங்களில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் நாட்டின் தற்போதைய நிலைமை இயல்பு நிலையை அடையும் போது கொள்வனவாளர்கள் பெரும் தொகை நிதியினை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment