இதுபோன்ற நிலையில், நம் நாட்டில் உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அரசாங்கம் தீவிரமாக தலையிட்டுள்ளதா என்ற கேள்வியை நாங்கள் எதிர்கொள்கிறோம். நாட்டிற்கான அந்நிய செலாவணி வருவாயின் முக்கிய ஆதாரங்கள் ஆடை, தோட்டத்துறை மற்றும் புலம்பெயர்ந்து உழைக்கும் மக்களாகும். இம் மூன்று துறைகளிலும் பெரும்பான்மை தொழிலாளிகள் பெண்களாகும்.ஆடைத் தொழில் துறையில் பெண்கள் எதிர் நோக்கும் பிரதான பிரச்சிணை அடிப்படை சுகாதார வசதிகள் இன்மை மற்றும் வேலையிழப்பாகும்.
தோட்டத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினையாகவுள்ளதும் இவையாகும். வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் அவலங்களை ஊடகங்கள் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன.
கோவிட் தொற்றுநோய் மற்றும் அதை நேரடியாகக் கையாளும் செவிலியர்கள்: குடும்ப சுகாதாரப் பணியாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் போன்ற பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என்பது ஒரு கடுமையான சோகம்.
இந்த முறை தொழிலாளர் தினத்தை கொண்டாடும் நேரத்தில் எழுந்துள்ள இந்த சூழ்நிலையில் அரசாங்கம் பொறுப்பற்ற விதமாகவும் மற்றும் திட்டமிடப்பட அடிப்படையிலும் செயற்படுகிறது என்பதும் தெளிவாகப் புலப்படுகிறது.
மேலும், மகப்பேறு விடுப்பைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய முடிவு அரசாங்கத்தின் மனிதாபிமானத் தரம் குறித்த கேள்வியாகும். இன்றும் ஆணகளுக்கும் பெண்களுக்குமிடயையேயுள்ளசம்பள முரண்பாடுகளும் தீர்ந்ததாக இல்லை.பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்.திறமைகளின் அடிப்படையில் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறாமையால் சிலர் நீதிமன்றங்களையும் நாட வேண்டியுள்ளது.அலுவலகங்களில் பணி தளங்களில் பெண்கள் பல வன்முறைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
கொவிட் என்ற போர்வையில் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட அரசாங்கம் தடை விதித்த போதிலும், உழைக்கும் பெண்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காமையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.
ஐக்கிய மகளிர் சக்தி அமைக்கும் எதிர்கால அரசாங்கத்தின் கீழ், பணிபுரியும் பெண்களுக்கு அது வகிக்கும் பங்கிற்கு ஏற்ப அர்பனிக்கும் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.
நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் சிகாகோவில் எட்டு மணி நேர வேலை நிறுத்தத்தின் போது உயிர் நீத்தவர்கள்,அன்று தொடக்கம் இன்று வரை போராடிய, இன்றும் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் அனைத்து பெண் தலைவிகளுக்கும் ஐக்கிய மகளிர் சக்தி தனது கௌரவத்தைச் செலுத்துகிறது.
ஹிருணிகா பிரேமசந்திர
தேசிய அமைப்பாளர்
ஐக்கிய மகளிர் சக்தி

0 comments :
Post a Comment