இலங்கையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்பவர்களுக்கு சுகாதார சேவைத் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய முதலாவது சுற்றில் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியைப் பெற்றவர்கள், இரண்டாவது சுற்றில் அதே தடுப்பூசி வகையையே பெறவேண்டும். மாறாக சைனோபார்ம் தடுப்பூசியை கொக்டைல் முறையில் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.எம். ஆனல்ட் கொழும்பில் நேற்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பின்போது, கருத்து வெளியிட்டிருந்த அமைச்சரவை இணைப் பேச்சாளராகிய உதய கம்மன்பில, கலப்பு தடுப்பூசிகளை பெற முடியும் என்பதை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :
Post a Comment