காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!காரைதீவு சகா-
றுதிக்கட்டப்பேரின்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ்உறவுகளை நினைவுகூர்ந்து நேற்றுமாலை தமிழர் பிரதேசங்களில் பரவலாக வீடுகளில் நினைவுச்சுடரேற்றிஅஞ்சலி நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்திலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்
முக்கயஸ்தரும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை
ஜெயசிறில் தனது வீட்டில் உயிர்நீத்த உறவுகள் நினைவாக புஸ்பாஞ்சலி
செலுத்தி சுடரேற்றிஅஞ்சலி செலுத்தினர். கொவிட் 19 அசாதாரண சூழ்நிலைகாரணமாக அமைதியாக சுகாதாரமுறைப்படி இந்நிகழ்வு
அவரது வீட்டில் நடைபெற்றது.

மேலும் சில தமிழ்ப்பற்றாளர்களும் சுடரேற்றிஅஞ்சலிசெலுத்தினர்.
நிகழ்வு இடம்பெற்றுமுடிந்த பிற்பாடு பொலிசார் வந்து விசாரணை செய்து
சென்றிருந்தார்கள். கடந்த மாத சபை அமர்வில் உலகத்தமிழர்கள் அனைவரும் மே 18ஆம் திகதி 18மணி 18நிமிடம் 18விநாடியில் எமது உயிர்நீத்தஉறவுகளை நினைவுகூரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :