பள்ளிவாசல்களை முழுமையாக மூடி; வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள் - பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப்எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கிழக்கு மாகாணத்திலே உள்ள பிரதான பாதைகளில் காணப்படுகின்ற பள்ளிவாயில்கள் மூடப்பட்டு இருப்பது போலக் காட்டப்பட்டாலும் ஊருக்குள்ளே இருக்கின்ற பள்ளிவாயல் சாதாரணமாக திறக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.

நாட்டின் முடக்க நிலை அறிவிக்கப்பட்டும் பள்ளிவாசல் வழமை போன்று திறக்கப்பட்டு தொழுகை நடாத்தப்படுவது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

என்னோடு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தெளபீக் தொலைபேசியில் பேசினார், அதேபோல மன்னார் மாவட்டத்தில் இருந்து இன்னொரு டெலிபோன் கோலும் வந்தது, இந்த எல்லா டெலிபோன் கோல்களிலும் சொல்லப்பட்ட விஷயம் என்னவென்றால், நாட்டிலேயே ஒரு முடக்க நிலை காணப்பட்டாலும் கூட, பொதுமக்கள் வீடுகளில் இருக்குமாறு வேண்டப்பட்டாலும் கூட, பெரும்பாலான முஸ்லிம் பிரதேசங்களிலே குறிப்பாக கிராமங்களில் பள்ளிவாயல்கள் திறந்து இருப்பதாகவும் அங்கே பள்ளிவாயல்களில் மக்கள் அதிகமாக நடமாடுவதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சொன்னார், நேற்று (23) நடந்த மேல்மட்ட கூட்டங்களிலும் இந்த விஷயங்கள் பேசப்பட்டதாகவும் கிழக்கு மாகாணத்திலே உள்ள பிரதான பாதைகளில் காணப்படுகின்ற பள்ளிவாயில்கள் மூடப்பட்டு இருப்பது போலக் காட்டப்பட்டாலும் ஊருக்குள்ளே இருக்கின்ற பள்ளிவாயல் சாதாரணமாக திறக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

எனவே, இது மிகவும் கவலைத் தரக்கூடிய விஷயம். நபி (ஸல்) அவர்கள் தொற்று நோயின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எமக்கும் சொல்லி இருக்கிறார்கள். நாடு இந்த நோயினால் மிகவும் பதட்ட நிலைக்கு ஆளாகியிருக்கிறது. நாடு ஒரு முடக்க நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஒரு வாரம் நாட்டை முடக்குகின்ற போது சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் எங்களுக்கு நஷ்டம் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. உங்களுக்குத் தெரியும் இந்தியாவில் என்ன நடக்கிறது. வேறு நாடுகளிலே என்ன நடக்கிறது என்று. உலக சுகாதார ஸ்தாபனம் உலகத்திலேயே மிகவும் பயங்கரமான நிலைக்கு உள்ளாகின்ற, கொவிட் 19 உடைய அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்ற நாடுகளில் ஒன்றாக முதல் முறையாக இலங்கையை அடையாளம் செய்திருக்கிறார்கள். அதேபோல, இலங்கையிலுள்ள மருத்துவர்களின் 4 சங்கங்கள் இலங்கையை இன்னும் இரண்டு வாரங்களுக்கு முடக்குமாறு அரசாங்கத்துக்கு வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான நிலைமையில் நாங்கள் ஏன் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றோம். அல்லாஹ்வை வீடுகளிலிருந்து தொழலாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். மழை வந்த போது வீட்டிலே இருந்து தொழுது கொள்ளும்படி சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவு ஒரு கொள்ளை நோய் பரவுகிறது என்ற அச்சுறுத்தல் இருக்கின்ற போது எப்படி நாங்கள் இவ்வாறு பொடுபோக்காக நடந்துகொள்ள முடியும் என்பது பற்றி முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

ஆகவே, தயவு செய்து அரசாங்க அதிகாரிகள் முஸ்லிம்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பள்ளிவாயல் நிருவாகிகள் பள்ளிகளை முழுமையாக இந்தக் காலத்திலே மூடிக்கொள்ளுங்கள். உலமாக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பள்ளிவாயல் நிருவாகிகள் அதற்கு ஒத்துழையுங்கள். சில இடங்களில் நிர்வாகிகள் இந்த சட்டங்களை மீறுகிறார்கள். சில இடங்களில் உலமாக்கள் மீறுகிறார்கள்.

எனவே, உலமாக்களும் நிர்வாகிகளும் பொதுமக்களும் சேர்ந்து இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டையும் மக்களையும் இந்த கொள்ளை நோயில் இருந்து பாதுகாப்பதற்கு உதவி செய்யுமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக் கொள்கின்றேன். என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :