தொழிலாளர் தினமும் பழமரக்கன்று நாட்டும் நிகழ்வும்நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
தொழிலாளர் தினத்தையொட்டி தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொடியேற்றலும் பழமரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு அட்டன் லெதண்டி தோட்டத்தில் இன்று காலை இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் மு.ராமச்சந்திரனின் தலைலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தோட்ட சிறுவர் நிலைய வளாகத்தில் 20 பழமரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோட்டன் பிரதேச அமைப்பாளர் நந்தகுமார், லெதண்டி தோட்ட தலைவர் சங்கரலிங்கம் நோர்வூட் காரியாலய உத்தியோகஸ்தர் திருமதி .இந்திரகாந்தி உட்பட சங்கத்தின் அங்கத்தினர் ஆதவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இயற்கையை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இன்றைய நாளில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் கொரோனா தொற்றிலிருந்து நாடு, உலகம் விடுபட வேண்டியும் இந்தியாவில் கொரோனதொற்றுக்குள்ளானவர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜன் இன்றி மரணிக்கும் துயர் சம்பவத்தை நினைவுகூர்ந்த தொழிலாளர் தினத்தில் பழமரக்கன்றுகள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :